இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையா: மத்திய அரசு மறுப்பு
14 ஆடி 2026 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 128
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத்தில் வெளியான செய்தி ஆதாரமற்றது. பொய் மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதி செய்வதில் பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டை நிலவுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த செய்தி முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. தவறாக வழிநடத்தக்கூடியது. சமீபத்தில் டில்லியில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது.
இரு தரப்பும் பலன்பெறும் வகையிலும், வர்த்தக ரீதியில் பலன்பெறும் வகையிலும், தொழில், விவசாயம் நுகர்வோருக்கு பலன் கிடைக்கும் வகையிலும்சமமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.
இதனை மையமாக வைத்து இரு நாட்டு அரசுகளும் முழு வீச்சில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வாலும், ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்து உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire