உலகின் சக்திவாய்ந்த விமானப்படை பட்டியல்; 5ம் ஆண்டாக 3வது இடத்தில் நீடிக்கும் இந்தியா
14 ஆடி 2026 செவ்வாய் 09:36 | பார்வைகள் : 141
உலகின் சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது ஆண்டாக 3வது இடத்தில் நீடிக்கிறது.
2026ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடுகளின் பட்டியலை டபுள்யூ.டி.எம்.எம்.ஏ., வெளியிட்டது. 103 நாடுகளில் உள்ள 129 வான்வழிச் சேவைகளை மதிப்பீடு செய்வதுடன், உலகம் முழுவதும் உள்ள 48,000க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்களை ஆய்வு செய்தது. விமானப் படையின் எண்ணிக்கை, விமானங்களின் தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்தியா தொடர்ந்து 5வது ஆண்டாக 3ம் இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. நமது அண்டை நாடுகளான சீனா 7வது இடத்திலும், பாகிஸ்தான் 18வது இடத்திலும் உள்ளன.
இந்திய விமானப்படை தற்போது 542 போர் மற்றும் தாக்குதல் விமானங்கள் உட்பட மொத்தம் 1,716 விமானங்களைக் கொண்டுள்ளது. இது சீனாவை விடக் குறைவாகும். சீனாவிடம் 3,733 விமானங்களுடன் பெரிய படைகளைக் கொண்டிருந்தாலும், தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவே பலம் வாய்ந்த படையைக் கொண்டுள்ளது.
இந்திய விமானப்படையில் 498 ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் 222 எம்ஐ-17 ஹெலிகாப்டர்களும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 111 ஹெச்ஏஎல் துருவ் மற்றும் ருத்ரா ரக ஹெலிகாப்டர்களும் அடங்கும். இது தவிர 282 போக்குவரத்து விமானங்கள், 374 பயிற்சி விமானங்கள் மற்றும் வான்வழி தாக்குதலை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் , உளவுத் தகவல் சேகரிக்கும் தளங்கள் மற்றும் வான்வழி எரிபொருள் நிரப்பும் வசதிகள் கொண்ட 20 சிறப்புப் பணி விமானங்களும் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire