முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்
14 ஆடி 2026 செவ்வாய் 08:33 | பார்வைகள் : 237
வரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளின் பரிந்துரைகளை அவர் கவனமாக கேட்டறிந்தார். மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire