Paristamil Navigation Paristamil advert login

தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் கால்பந்து அரையிறுதிப் போட்டி காரணமாக மூடப்படும் பல Métro நிலையங்கள் !!

தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் கால்பந்து அரையிறுதிப் போட்டி காரணமாக மூடப்படும் பல Métro நிலையங்கள் !!

13 ஆடி 2026 திங்கள் 09:03 | பார்வைகள் : 366


Paris நகரில் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள், Champ-de-Mars பகுதியில் நடைபெறும் feu d’artifice நிகழ்ச்சி மற்றும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை முன்னிட்டு, பல Métro நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 13 ஆம் திகதி திங்கட்கிழமையும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் தலைநகரின் போக்குவரத்து சேவைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் வழக்கமாக ஜூலை 14 அன்று நடைபெறும் Champ-de-Mars feu d’artifice நிகழ்ச்சியும் அதற்கு முன்னதாக நடைபெறும் இசை நிகழ்ச்சிகளும், Nice தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு ஜூலை 13 ஆம் திகதிக்கே மாற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து திங்கட்கிழமை மாலை 18.00 மணி முதல் Métro வழித்தடங்கள் 6,8 மற்றும் 9 இல் உள்ள Passy, Boissière, Bir-Hakeim, Cambronne, Sèvres-Lecourbe, Dupleix, Trocadéro, École Militaire, Alma-Marceau மற்றும் Saint-Philippe-du-Roule ஆகிய Métro  நிலையங்கள் மூடப்படுகின்றன. மேலும் இரவு 23.00 மணி முதல் Rue de la Pompe நிலையமும் சேவையிலிருந்து விலகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு ஜூலை 14 அன்று திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதுடன், அதே நாளில் France மற்றும் Espagne அணிகளுக்கிடையிலான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியும் இடம்பெறவுள்ளது. இதனால்  RER A மற்றும் Métro வழித்தடங்கள் 1, 2, 6, 8, 12 மற்றும் 13 இல் உள்ள Charles de Gaulle - Étoile, George V, Argentine, Tuileries, Concorde, Franklin Roosevelt, Champs-Élysées - Clemenceau, Kléber மற்றும் Boissière உள்ளிட்ட நிலையங்கள் நாள் முழுவதும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.