Paristamil Navigation Paristamil advert login

பாங்கொக்கில் உள்ள பிரபல உணவகத்தில் தீ விபத்து - 27 பேர் பலி

பாங்கொக்கில் உள்ள பிரபல உணவகத்தில்  தீ விபத்து - 27 பேர் பலி

13 ஆடி 2026 திங்கள் 07:31 | பார்வைகள் : 175


தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல 'Rong Beer Na Lat Phrao' உணவகம் மற்றும் மதுபான விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 63 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாடுச்சாக் மாவட்டத்தின் லட்ப்ராவ் பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியில், மேடைக்கு அருகிலிருந்த மின் சர்க்யூட் பிரேக்கரில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவசர வெளியேறும் வழியை அடைய முடியாமல் கழிவறையில் தஞ்சமடைந்த பலர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.