SNCF - பரிஸ் – தென்‑கிழக்கு TGV சேவைகளில் 6 மணி நேரம் வரை தாமதம்!!
12 ஆடி 2026 ஞாயிறு 20:57 | பார்வைகள் : 343
பிரான்சில் விடுமுறை பயணங்கள் அதிகமாக இருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை 12 ஜூலை, பரிஸ் ↔ தென்‑கிழக்கு TGV சேவைகளில் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என, SNCF அறிவித்துள்ளது.
SNCF எல்லைக்கு வெளியே ஏற்பட்ட காட்டுத்தீயினால், தென்‑கிழக்கு அதிவேக தொடருந்துப் பாதை (LGV Sud‑Est) , கடுமையாக பாதிக்கப்பட்டது
எந்த தொடருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன?
SNCF தனது இணையதளத்தில்,
TGV InOui
TGV Lyria
OuiGo
இவை அனைத்தும்:
Paris ↔ Le Creusot (Saône‑et‑Loire) இடையேயான பயணங்களில்
6 மணி நேரம் வரை தாமதம் சந்திக்கலாம்
தீயணைப்பு படைகள் + தொடருந்து மற்றும் தண்டவாள வலையமைப்பு குழுக்கள், நிலைமையச் சீராக்க தீவிரமான செயற்பாட்டில் இறங்கி உள்ளன.
தீ காரணமாக
அதிவேக பாதை பயன்படுத்த முடியாத நிலை
தொடருந்துகள் சாதாரண பாதை வழியாக மாற்றி இயக்கப்படுகின்றன
இதனால் பயண நேரம் நீள்கிறது
SNCF மேலும் சில தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் என எச்சரித்துள்ளது.
SNCF கணிப்பின்படி, இரவு இறுதியில் தொடருந்து போக்குவரத்து சாதாரண நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire