Paristamil Navigation Paristamil advert login

அதி உச்ச வெப்ப அலை : ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் 42.3°C - இல்-து-பிரான்சிற்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை!

அதி உச்ச வெப்ப அலை : ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் 42.3°C - இல்-து-பிரான்சிற்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை!

12 ஆடி 2026 ஞாயிறு 20:45 | பார்வைகள் : 360


பிரான்ஸ் தற்போது புதிய அதி உச்ச வெப்ப அலை தாக்கத்தில் உள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை, Météo‑France,

37 மாவட்டங்களை சிவப்பு எச்சரிக்கையில் (vigilance rouge)

46 மாவட்டங்களை  செம்மஞ்சள்‑எச்சரிக்கையில் (vigilance orange) வைத்துள்ளது.


எச்சரிக்கை - வெப்பநிலை 42.3°C வரை உயர்ந்தது

41.8°C - Saintes (Charente-Maritime)
40.9°C - Châteaumeillant (Cher)
40.9°C - Mauprevoir (Vienne)
40.9°C - Angoulème (Charente)

Météo‑France தகவலின்படி,

இந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 42.3°C வரை சென்றுள்ளது.இது இந்த அதி உச்ச வெப்ப அலைக்கான உச்ச நிலைகளில் ஒன்று.

37 மாவட்டங்கள் சிவப்பு  எச்சரிக்கையில் (திங்கட்கிழமை 13 ஜூலை)


Météo‑France திங்கட்கிழமை 13 ஜூலைக்கான, செம்மஞ்சள் எச்சரிக்கை பட்டியலைத் தொடர்ந்து வைத்துள்ளது.

சிவப்பு  எச்சரிக்கையில் உள்ள மாவட்டங்கள்:

Allier, Aveyron, Charente, Cher, Corrèze, Creuse, Deux‑Sèvres, Dordogne, Essonne, Eure‑et‑Loir, Hauts‑de‑Seine, Haute‑Vienne, Ille‑et‑Vilaine

Indre, Indre‑et‑Loire, Loire‑Atlantique, Loir‑et‑Cher, Loiret, Lot, Lot‑et‑Garonne, Maine‑et‑Loire, Mayenne, Morbihan, Nièvre, Orne, Paris

Sarthe, Seine‑et‑Marne, Seine‑Saint‑Denis, Tarn, Tarn‑et‑Garonne, Val‑de‑Marne, Val‑d’Oise, Vendée, Vienne, Yonne, Yvelinesஇது பிரான்சின் மத்திய, மேற்கு, வடக்கு, அதி உச்ச வெப்ப அலைக்குள் இருப்பதை காட்டுகிறது.

இல்-து-பிரான்சிற்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஏன் எச்சரிக்கை?

மிகவும் கடுமையான வெப்பம்

இரவு வெப்பம் குறையாத நிலை

முதியவர்கள், குழந்தைகள், உடல் நல பிரச்சினையுள்ளவர்கள்  
ஆகியோருக்கு உயர் அபாயம்

என்பதை குறிக்கிறது.

இந்த அதி உச்ச வெப்ப அலை, பல நாட்கள் நீடிக்கும்

பெரும்பாலான பகுதிகளில் 40°C‑க்கு அருகில்,

சில இடங்களில் 40°C‑ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.