Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய அரசு கண்டனம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய அரசு கண்டனம்

13 ஆடி 2026 திங்கள் 12:56 | பார்வைகள் : 120


ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் அருகே  கப்பல் மீது ஈரான்  தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார். தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் முறிந்த நிலையில்,  மீண்டும் தாக்குதல் துவங்கி உள்ளது.   ஈரானின் 140க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் துவங்கி உள்ளன. இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்,  கத்தார், பஹ்ரைனில் அமெரிக்க தளங்கள் மீது  தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி  வழியாக  ஓமன் அருகே சென்ற சைப்ரஸில்  பதிவு செய்யப்பட்ட வர்த்தக  கப்பல்  மீது ஈ ரான் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கப்பலில் இருந்த 11 இந்தியர்கள்  உயிர் தப்ப கடலில் குதித்தனர். 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கடண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்  நடத்தப்பட்டதற்கு கண்டனம்  தெரிவித்துக் கொள்கிறோம். 11 இந்தியர்கள் இருந்த நிலையில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரை மாயமாகி உள்ளார்.

இந்த பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.  அங்கு பதற்றத்தை உடனடியாக தணிப்பதுடன் அங்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை காப்பதற்கு  தூதரக ரீதி மற்றும் பேச்சுவார்த்தை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கும், உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  கப்பல்கள் தடையின்றி சென்று வருவதுடன், சர்வதேச சட்டங்கள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய  வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.