Paristamil Navigation Paristamil advert login

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களை வரவேற்கிறோம்; அர்ஜூன் சம்பத்

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களை வரவேற்கிறோம்; அர்ஜூன் சம்பத்

13 ஆடி 2026 திங்கள் 08:38 | பார்வைகள் : 143


லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களை வரவேற்கிறோம் என ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சித்தம்பலத்தில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: சட்டசபையில் சபாநாயகர் பைபிள் படிக்கிறார். அதில் தவறில்லை, அதே நேரத்தில் பகவத் கீதைக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டும். எப்போதுமே ஹிந்து மதத்தை மிக கேவலமாக விமர்சித்து பேசும் வி.சி.க.,வைச் சேர்ந்த வன்னி அரசு, இப்போது அமைச்சர் ஆகியுள்ளார். அவர், 'குண்டு வைத்தவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும்' என்கிறார்.

முதல்வர் விஜயை பொறுத்தவரை, பிற கட்சிகளுடன் கூட்டணியும் வேண்டும், அவர்கள் சொல்வதையும் கேட்கவும் வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார். 'தமிழ்த்தாய் வாழ்த்தா; வந்தே மாதரமா' என்பது உள்பட ,பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' என்ற நிலையில் முதல்வர் இருக்கக் கூடாது'

அதே நேரத்தில், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களை வரவேற்கிறோம். பல கோடி ரூபாய் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலு, நடவடிக்கைக்கு அஞ்சி சிங்கப்பூர் பறந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமினுடன் அலைகிறார். இதுபோன்ற ஊழல் வழக்குகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.