Paristamil Navigation Paristamil advert login

2031ல் நிச்சயம் ஆட்சி மாற்றம்: அண்ணாமலை திட்டவட்டம்

2031ல் நிச்சயம் ஆட்சி மாற்றம்: அண்ணாமலை திட்டவட்டம்

13 ஆடி 2026 திங்கள் 06:28 | பார்வைகள் : 154


39 வயதுக்கு உட்பட்டவர்கள் 2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். 2031ல் மற்றொரு ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்,'' என பொள்ளாச்சியில் நடந்த 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.

வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று நடந்தது. இம்மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:

பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையோடு  எல்லோரும் தலைவர்களாக சாமானிய மனிதர்களாக சமமானவர்களாக நின்று கொண்டிருக்கிறோம்

இது ஒரு மாவட்டத்தில் நடத்தப்படக்கூடிய இந்த மாதத்திற்கான போதை விழிப்புணர்வு மாநாடு மட்டும் தான். ஆனால் உங்களை பார்க்கும் போது, உங்கள் நம்பிக்கையை பார்க்கும் போது பொள்ளாச்சியில் மட்டும் தான் மாநாடு நடக்கிறது என சொல்லியிருந்தாலும் கூட எல்லா பக்கங்களில் இருந்தும் வந்திருக்கிறீர்கள்.

பெரும் எதிர்பார்ப்போடு, அன்போடு நாங்களும் இருக்கிறோம் என்று சொல்வதற்கு மட்டும் அல்ல, நாங்களும் தலைவர்களும் பணி செய்வோம், சமுதாயத்தை மாற்றுவோம் என  வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும்,நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. ஒரு அரசியல் கட்சி மாநாடு போடும் போது தலைவர்கள் இருப்பார்கள், புகைப்படம் இருக்கும். இங்கு எந்த பொறுப்பும் யாருக்கும் கிடையாது.  எனக்கு தலைமைச் சேவகன் என்ற பொறுப்பு தான். 2020ல் இருந்து அமைப்பில் இருக்கிறேன்.2025 ஜூன் 5ல் வந்தவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

எல்லாரும் தன்னார்வ குழு, நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வீடு வீடாக ஏறி, இறங்கி ஒருவரிடமும் ஜூலை மாதத்திற்கான போதை  விழிப்புணர்வு குறித்து பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

தலைவர் அறிமுகப்படுத்தாமல் அனைவரும் தலைவராக அமர்ந்துள்ளீர்கள். பொள்ளாச்சியில் இந்த நிகழ்வை பார்க்கும்போது எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தோமோ 50 சதவீதம் இலக்கை தாண்டி விட்டோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 50 சதவீதம் தாண்டிவிட்டோம். கல்லூரி மாணவர் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். அனைவரும் இதயத்தில் இருந்து சொன்னோம்.

ஜூன் 5ம் தேதி 12 மணிக்கு 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பு, அரசியல் இயக்கம். மக்கள் புரட்சி, கீழ் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு மனிதனும் நானும் தலைவன் என்கிற  இறுமாப்போடு சமுதாயத்தில் உள்ள பிரச்னையை கண்டுபிடித்து, அதற்கான தீர்வை  அரசு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்காமல்  தனி மனிதனாக அந்த தீர்வில் நானும் பங்கெடுப்பேன், பாடுபடுவேன் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.

இன்று சரியாக 38 வது நாள். 38 நாளில் 19 லட்சத்தை தாண்டி இணைந்துள்ளனர். யாருக்குமே 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இணைய வேண்டும் என நான் சொல்லவில்லை. தொலைபேசியில் அழைக்கவில்லை. ஏன் சொல்லவில்லை என்றால், இது எனது குடும்ப கட்சி கிடையாது. எனது அமைப்பு கிடையாது.

இது குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. உங்களுக்கு சொந்தமானது தான். அதனால் ஜூன் 5ல் இருந்து இந்த அமைப்பை பொறுத்த வரை நானும் தன்னார்வலர் தான் என்ற கொள்கையில்  இருக்கிறேன்.

எல்லோரும் சேர்ந்து ஒரு குடும்பமாக இருக்கும் போது மட்டும் தான், நாம் எதிர்பார்க்கும் நேர்மையான சமுதாயம் பிறக்கும் என்ற ஒற்றை நம்பிக்கை. இன்று எந்த அழைப்பும்  இல்லாமல் இத்தனை பேர் வந்துள்ளீர்கள் என்றால், தமிழகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லது பேசுகிறார்கள்.நல்லது செய்ய தயாராக இருக்கிறார்கள். வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்பது வீ த லீடர்ஸ் மாநாடு பறைசாற்றுகிறது.

நமது வேலையின் மூலமாக மக்கள் நம்மிடம் வர வேண்டும். நமது வேலையை பார்க்க வேண்டும். எங்கேயோ மரம் நடுகிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் போதை விழிப்புணர்வுக்காக நிற்கிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக போராடுகிறார்கள். இளைஞர் நலனுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துகிறார்கள்.

இதனை பார்த்து மக்கள் இணையும்போது 'வீ த லீடர்ஸ்'  குடும்பத்தில் இணைந்து 50 லட்சம் என்ற எண் வரும் போது தமிழக மக்கள் அழைக்கின்றார்கள் என்ற பொருள் அது நீங்கள் மனதில் வைத்தால் ஒருவாரத்தில், ஒரு மாதம், ஆறு மாதத்தில் வரலாம். ஆனால் 50 லட்சம் பேரும் தானாக விரும்பி வர வேண்டும்.

அப்போது தான் நிரந்தரமான நல்ல சமுதாயம் கட்டமைக்க முடியும்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றாக சேர்ந்திருக்கிறோமோ அடுத்த 6 மாதம்  இலக்கு  தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்த மாதம் போதைப்பொருள்  எதிரான விழிப்புணர்வுக்காக 26ம் தேதி திருச்செந்தூர், தூத்துக்குடியில் இருக்கிறேன்.

அடுத்த மாதம் சுற்றுச்சூழல் மாதம். தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இருந்து நட வேண்டும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி குளங்களை சுத்தம் செய்ய வேண்டும். நதி நீர் சுத்தப்படுத்த வேண்டும்.

செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு மாதம். குழந்தைகள் பாதுகாப்பு நலன் அதற்கான விஷயத்தை பேசப்போகிறோம். ஆறு மாதம் ஒவ்வொரு முக்கியமான பிரச்னைகளை எடுத்து ஒவ்வொரு தன்னார்வலர்களும் மக்களை சந்தித்து  பெரிய சிறிய மேடை, திண்ணை, ஆட்டோவில் செல்லும்போது பேசலாம். பஸ், ரயில், விமான பயணங்களில் பேசலாம்.

தனி மனிதனாக செயல்படும் போது மாற்றம் நடக்கும். ஜூலை 12  பொள்ளாச்சி என்பது சரித்திரம். அழைப்பு இல்லாமல் இத்தனை பேர் தன்னெழுச்சியாக வருவார்கள் என்பதை பொள்ளாச்சி பார்த்திருக்கிறது. திருச்செந்தூரும் பார்க்கும். தமிழகமும் இப்படி பார்க்கத் தான் போகிறது.

ஏனென்றால் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள் பணி செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்கான மேடையை கொடுக்க இந்த அமைப்பு இருக்கிறது.

19 லட்சம் பேரில் 83 சதவீதம் பேர் ஆண்கள். 17 சதவீதம் பேர் பெண்கள். 17 சதவீதம் பேர் பெண்கள் என்பது வெற்றி. இதனை 33, 40,50 என பெண்களை அமைப்பில் சேர்க்க வேண்டும்.

அரசியல் கட்சியில் அதிகபட்சம் 5 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். அமைப்பில்   ஆரம்பித்த ஒரு மாதத்தில் 17 சதவீதம் பெண்கள் என்பதை  நம்பி வந்துள்ளனர். மாற்றத்தை கொடுப்போம் என நம்பி வந்துள்ளனர்.  அதையும் இன்னும் அதிகமாக எடுத்துச் செல்லும் நம்பிக்கை இருக்கிறது.

ஜென்ஸீ  எப்படி வேண்டுமானாலும் போவார்கள் என சொல்வார்கள். மேடையில் இருந்தவர்கள் அனைவரும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் ஜென்ஸீ.

19 லட்சம் பேரில், 14 சதவீதம் பேர்  18-25 வயது வரை உள்ளவர்கள். 26 -39 வயது வரை 40 சதவீதம் பேர். வீ த லீடர்ஸ் அமைப்பு இளம் அமைப்பு. 39 வயதுக்கு கீழ் 54 சதவீதம் பேர் அமைப்பில் உள்ளனர். அவர்களின் குரலை கேட்க வேண்டும். எண்ணோட்டம் வித்தியாசமானது. சமுதாயத்தை வித்தியாசமாக பார்க்கிறார்கள் . மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனர். உடனடியாக வேண்டும் என்கி்ன்றனர்.

39 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். 2026 ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031 ல்  மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், அது படித்தவர்கள், பண்பானவர்கள், நேர்மையானவர்கள், சமுதாயத்திற்காக முழுமையாக அர்ப்பணித்தவர்கள். இந்த 5 ஆண்டு காலம் இருக்கிறது. ஆறு மாதம் இருக்கிறது.  தலைவர்கள் வருவார்கள். பட்டி தொட்டியில் இருந்து வருகிறார்கள். கிராமத்தில் இருந்து வருகிறார்கள்.

குடும்ப ஆட்சி காரணமாக எத்தனை பேர் அரசியல் பக்கம் வராமல் இருந்தார்கள்? அவர்களை எல்லாம் நாம் கூட்டி வர வேண்டும். ஆறு மாதம் சமுதாய பணிகளை செய்தால் மக்கள் நம் முன்னால்  செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த ஜூலை போதை விழிப்புணர்வு மாதம். அடுத்த ஜூலை, அதற்கு அடுத்த ஜூலை நடக்கத் தான் செய்யும். வீ த லீடர்ஸ் அமைப்பு இருக்கும் வரை , நாம் இருக்கும் வரை,  எத்தனை ஆண்டுகள் இந்த அமைப்பு நடைபோடும் வரை போதைப்பொருளுக்கு எதிராக இருப்போம். இது தொடர் நடவடிக்கை. ஒரு மாதம் மாநாடு போட்டோம். கை தட்டினோம். பார்த்தோம், கிளம்பினோம் என வரவில்லை. நாம் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. உண்மையான மாற்றத்தை கொடுக்க வேண்டும் என வந்தவர்கள் நாம்.

நம்முடைய தீர்மானத்தில் வெள்ளை பேன்ட் மாதம். அமெரிக்காவில் 1980 ரெட் ரிப்பன்  மாதம் என கொண்டாடினார்கள். அமெரிக்க அரசு கொண்டாடியது. போதையை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்று வீ த லீடர்ஸ் ஒயிட் பேன்ட் போட்டு மக்களிடம் பேசுகிறோம். ஒவ்வொரு ஜூலையும் நடக்கும்.

நிறைய பேர் கேட்கலாம். பொள்ளாச்சியில் இவ்வளவு பேரா, அதுவும் அரசியல் மாநாடு கிடையாது.  இன்னொரு கட்சியை திட்டுவதற்கு மாநாடு இல்லை. இன்னொரு தலைவன் சரியில்லை சொல்வதற்கு இம்மாநாடுஇல்லை ஆட்சியில் ஒருவர் வந்துவிட்டார். வந்த உடன் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான மாநாடு இல்லை.  இந்த மாநாடு, இத்தனை ஆயிரம் பேர் இணைந்து போதையில்லாத தமிழகத்தை  நம்முடைய காலத்தில் உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் வந்துள்ளது.

18 வயது வரை 70 வயது வரை 24 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.  4 ல் ஒரு ஆண், 18 முதல் 70 வயது வரை உள்ள மது அருந்துகிறார். மது  அருந்துவதில் அடிமையாகி உள்ளனர். இதனால் செய்தித்தாளில்  அதிர்ச்சி சம்பவத்தை படிக்கும்போது மது கலந்துள்ளது. பலாத்கார சம்பவத்தில் கஞ்சா இருக்கிறது.

ஒரு பெண்ணை துன்புறுத்தும் சம்பவத்தில் ஏதோ ஒரு இடத்தில் மது ஓளிந்துள்ளது.ஒரு வீட்டில் பெண்ணை கொடுமை நடக்கிறது. மது இருக்கிறது.

சம்பாதித்த பணத்தில் வீட்டிற்கு முழுமையாக கொடுக்கவில்லை. குழந்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை. மது இருக்கிறது.சாலை விபத்துகளில் இந்தியா நம்பர் 1. 1. 74 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதிலும் தமிழகம் முதலிடம்.அனைத்து இடங்களிலும் மது கலந்துள்ளது. முக்காடு போட்டு மது குடித்த காலம் வேறு. தைரியமாக நெஞ்சை நிமர்த்திக் கொண்டு மது அருந்தும் காலம் இது.

5,500 டாஸ் மாக் கடைகள் உள்ளன. பார்த்த  இடத்தில் திறந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்கும் பொறுப்பு நமது பொறுப்பு இல்லையா? தாய்மார்களுக்காக நாம் நிற்க வேண்டாமா?

ஆரோக்கியமான குழந்தைகளுக்கா நிற்க வேண்டாமா ?அதை நாம் செய்ய வேண்டாமா அதைத் தான் நாம் செய்கிறோம். மது என்பது அடிப்படையில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதற்காக தான்  இது மக்கள் விழிப்புணர்வு மாநாடாக மாறி உள்ளது.

நிச்சயம் அரசு செய்யும் அரசு செய்கிறார்கள் போலீஸ் உள்ளது. எங்கு செய்வார்கள். சப்ளையை கட்டுப்படுத்துவார்கள். கஞ்சா விற்பவனை கைது செய்வார்கள். கஞ்சாவை வாங்க வேண்டும் என நினைப்பவர்களை காவல்துறை பிடிக்காது.

மன அழுத்தம், காதல் தோல்வியில் இருக்கிறேன் என சொல்பவர்களை காவல்துறை கைது செய்ய மாட்டார்கள். நாம் தான் செய்ய வேண்டும். நாம் பேச வேண்டும். குடும்பம், அடுக்குமாடி குடியிருப்பு, நகரம், கிராமத்தில் பேச வேண்டும். மது எந்தளவு நம்மோடு கலந்துள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

2026 ல் ஒரு கோடியே 68 லட்சம் பேர்  ஓட்டுப்போட்டு எனக்கு இவர் வேண்டும்.கட்சி வேண்டும் என தேர்வு செய்துள்ளனர். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டியது நமது கடமை. இவர்கள்  ஏதோ 10, 15, 20 வருடம் எம்எல்ஏ கிடையாது. தட்டுத்தடுமாறி அரசியல் வந்து  இன்று தவெகவில் எம்எல்ஏ ஆனார்கள்.

செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் முதல்முறை அமைச்சர் ஆனவர்கள்.  கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள். தடுமாறும்போது நல்ல சமுதாயமாக இருந்தால் கை தூக்கிப் பிடித்து விட வேண்டுமே தவிர கீழே அழுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

அதிகாரத்திற்காக இல்லை

வீ த லீடர்ஸ் அமைப்பில் உள்ளவர்கள், வந்த தன்னார்வலர்கள் அனைவரும் மூர்க்கத்தனமாக அதிகாரத்தை பிடிக்க வரவில்லை.  ஆணவத்தோடு அமைப்பை ஆரம்பிக்கவில்லை. அதிகாரத்தை பிடிக்க வர வேண்டும் ஒரே நோக்கத்தில் இல்லை. நல்ல சமுதாயத்தை படைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் இந்த அமைப்பும், அரசியலும் இருக்கும்.

பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடுவோம் என முதல்வர் கூறினார். ஆனால் கள ஆ ய்வில் 150 மீட்டருக்குள்  டாஸ்மாக் உள்ளது.  நம்மை பொறுத்தவரை அமைப்பு மூலம், அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என சொல்வதை விட, ஆரோக்கியமாக அரசியல் செய்து வலியுறுத்த வேண்டும். கேட்கவில்லை என்றால் அதற்கு வேறு வழி. இன்று சொல்கிறோம். கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் அடுத்த ஓராண்டுகாலம் சொல்லத்தான் போகிறோம்.

ஜூலை1 ம் தேதி 39 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கை கொடுத்தோம். டாக்டர்கள் சேர்ந்து உருவாக்கியது. போதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும். முதல் ஆண்டு, இரண்டாண்டு என்ன செய்ய வேண்டும் என அரசிடம் கொடுத்துள்ளோம். அதனை அரசு செய்தால் சந்தோஷம். செய்யாவிட்டாலும் சந்தோஷம். மக்கள் பார்த்து கொண்டுள்ளனர்.

செய்வதற்காக வந்துள்ளீர்கள் என மக்கள் நினைக்கின்றனர். ஆரோக்கியமான அரசியல் செய்வீர்கள்.

திமுக ஆட்சியில் ஒரு கல்லூரியில் பேச போனேன். ஒரு வார காலம் மின்சாரம் துண்டித்து விட்டனர். தாளாளர் என்னை அழைத்து, நல்லது பேசுவீர்கள் என அழைத்தேன். மின்சாரம் துண்டித்து விட்டனர் என்றனர்.ஆணவத்தோடு யார் அரசியல் செய்தாலும் இந்த மண் அவர்களை விடாது என்பதற்கு 2026 தேர்தல் ஒரு சாட்சி.

நம்முடைய வேலையை செய்வோம். எந்த அரசியல் குழப்பமும் வேண்டாம். ஆரோக்கியமான அரசியல் க ட்சியாக மாறத்தான் போகிறது. 2031 தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி நிற்கும். ஆரோக்கியமான அரசியலுக்காக நிற்போமே தவிர. அற்ப அரசியலுக்காக,  அதிகாரம் வேண்டும் என்ற அரசியலுக்காக,ஒரு மனிதனை கீழே தள்ள வேண்டும் என்கிற அரசியலுக்காக இல்லை. இன்னும் சிறந்ததாக சொல்வோம்.செய்வோம். சிறந்த தலைவர்களை  அறிமுகம் செய்வோம். நல்ல மனிதர்களை கீழே இருந்துஅழைத்து வருவோம்.  மக்கள் நமக்கு வாய்ப்பு அளிப்பார்கள். அடுத்த 6 மாதம் நமது இலக்கு, என்ன செய்ய  வேண்டும் என தெளிவாக இருப்போம்.

பாஜவில் இருந்து தொண்டர்கள் ,தலைவர்கள் வந்துள்ளனர். அதிமுக, திமுகவில் இருந்து தலைவர்கள் வந்துள்ளனர். அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.  சமீபத்தில் ஒரு கட்சியில் இருந்து வெளியே வருவது... ஒரு மேடையில் பேச வேண்டும் நான் எங்கும் பேசவில்லை. ஒரு கட்சியில் இருந்து வெளியே எதற்காக வருகிறோம். அந்த கட்சியின் மீது கோபம் ஒரு பக்கம்ஆமாம்.அந்த கோபத்தை எப்படி காட்ட வேண்டும். அதற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டும். ஆமாம்.இன்றும் சிறந்த தமிழக மக்களுக்கு இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய பாதையை இருக்கும் போது அதனை தேர்வு செய்தோம். யாரை பற்றியும் 38 நாட்கள் தவறாக பேசவில்லை.சில திமுக நண்பர்களுக்கு சந்தேகம். பாஜவின் பீ டீம் தானே அண்ணாமலையா. ஏன் வெளியேவந்தா திட்டணுமே. யாரையும் திட்டவில்லையே. மோடியை திட்டியிருந்தால் தானே வருவார்கள். ஏன் திட்டவில்லை என்கின்றனர்.

எளிய விவசாய குடும்பத்தை சார்ந்த யாருமே வெளியே வரும்போது பழிச்சொல்லை சொல்லி வரமாட்டோம். இன்னொரு கேள்வி, அண்ணாமலை நீ தேசியவாதியா இறுமாப்புடன் சொல்வேன். நான் ஒரு தேசியவாதி. இந்தியா தமிழனா எதற்கு இதில் பிரச்னை. இந்தியன் என்பதில் கர்வம்,. அந்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் வர வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம்.இல்லை பெட்னாவி்ல் இப்படி பேசினீர்களே இப்போதும் சொல்கிறேன். என்னுடைய மதம். நான்ஒரு ஹிந்து. திருநீறு, பொட்டு வைக்கிறேன். வீட்டில் இருந்து வெளியே வரும் போது, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டிவிட்ட சாமானிய மனிதராக, அனைவருக்கும் பொதுவான மனிதராக நிற்கிறேன்.

மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி பிடித்து காட்ட  வேண்டிய அவசியமில்லை. உண்மையான ஹிந்து அனைவவரையும் சமமாக பார்ப்பான். அனைவரும் சமமாக  இருப்பான்.  யார் பெரிது, சிறிது பேசமாட்டான். அனைவரும் நேர்கோட்டுபாதையில் செல்வான். அது தான்  ஹிந்து தத்துவம்.கரூரில் 3,500 ஏக்கர் இனாம் நிலத்தை கொடுத்துள்ளனர். தவெக அரசு  ஆதரவு அறிக்கை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் கோவிலுக்கு எதிரானவரா  ஹிந்து விரோதியா?விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து இனாம் நிலம் என்பது கோவிலில் வேலை செய்தவர்களுக்கு கொடுத்தது. அதனை காமராஜர் காலத்தில் ஆட்சியில் இருந்து விலகும் முன்பு, தாசில்தாரை போட்டு  பஞ்சாயத்து செய்ய முயன்றனர்.

திமுகவினர் இதில் அரசியல் செய்து, செய்யாமல் வைத்துள்ளனர்.ஒரு அரசு 60.100 ஆண்டுகளாக இனாம் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு  திரும்ப மரியாதை கொடுத்ததை வரவேற்க வேண்டியது  தமிழரின் கடமை. கோவில் நிலத்தை மீட்போம். கோவில் நிலத்திற்கும், இனாம் நிலத்திற்கும்  சம்பந்தமும் இல்லை. இதற்கு எனக்கு கிடைத்த பட்டம் அண்ணாமலை ஹிந்து விரோதி. அந்த பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் பட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

எச்.ராஜா, 2024 கரூர் வந்து இனாம் நிலத்தை கொடுக்க வேண்டும் என சொன்னார், அவர் ஹிந்து விரோதி கிடையாது.2026 சட்டசபை தேர்தலில்  இனாம் நிலத்தை வசிப்பவர்களுக்கு கொடுப்போம் என  இபிஎஸ் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்.

ஆனால் நேர்மையாக, நியாயமாக வசிக்கும் மக்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் ஹிந்து விரோதி.மதம் , சாதி இந்த அமைப்புக்கு வெளியே. சாதி மதத்தை வைத்து அரசியல் செய்து பட்டது போதும்.எனது மதம் எனக்கு பெரிது. உனது மதம் உனக்கு பெரியது. அதை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வரும்போது,.அனைவருக்கும் பொதுவான தமிழனாக, இந்தியனாக ,மனிதனாக நமது வாழ்க்கை இருக்கட்டும் நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.அந்த அரசியல் வேண்டாம். செல்ல வேண்டாம். அரசியல் சாக்கடைக்கு செல்ல வேண்டாம்.நமது அரசியல் என்பது பாரத நாட்டில் தமிழகத்தைமுதன்மையானதாக மாற்ற வேண்டும். அதற்காக நமது உழைப்பு.வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றீர்கள். இதற்கு வீ த லீடர்ஸ் அமைப்பை பயன்படுத்துங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுங்கள்.

யார் நம்மை பிரித்தாலும் சேவை என்ற வார்த்தையில், தமிழகத்தில் மாற்றம் என்ற வார்த்தையில், பெண்கள் முன்னேற்றம் என்பதில் இணைந்திருக்கிறோம்.வீ த லீடர்ஸ் அமைப்பு அரசியல் கட்சியாக மாறப்போகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதிகாரத்திற்கு நேர்மையானவர்கள் வந்து அமரும் போது தான் மாற்றம் ஏற்படும். சரியான தலைவர்கள் வரும் போதுமாறும். இப்போது மாறாது. பணிகள் நிறைய இருக்கிறது.அக.15 கலாம் பிறந்த நாள். APJ kalam center for ethics and politics. அக்.,15ல் திறக்கப்படும். ஒராண்டில், 1.50 ஆயிரம் பேர் அதில் பயிற்சி பெற்று இருப்பார்கள். இத்தனைசமுதாய பணிகளை செய்யப்போகிறோம்.

தமிழகத்தில் ஒரு ரேசன் அட்டையின் மீது 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இப்படி இருந்தால் பிரம்மாவே வந்தால் காப்பாற்ற முடியாது. தவெக அரசு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கும். அடுத்தாண்டு 80 ஆயிரம் கோடி கடன் வாங்கும். தவெக அரசு முடியும் போது 14 லட்சம் கோடி கடன் இருக்கும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.