Paristamil Navigation Paristamil advert login

Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

12 ஆடி 2026 ஞாயிறு 15:46 | பார்வைகள் : 165


இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான Hero MotoCorp, தனது மின்சார வாகன வரிசையில் புதிய Vida VX2 Plus மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டர் 4.4 kWh பேட்டரியுடன் வருகிறது. இதில் இரண்டு 2.2 kWh லித்தியம்-அயான் நீக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 187 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 kW போர்டபிள் சார்ஜர் மூலம் 0 முதல் 80% வரை 3 மணி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதே DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 65 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.

இந்த ஸ்கூட்டர் 6 kW பீக் பவர் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 26 Nm டார்க் வழங்குகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 90 km ஆகும். Eco, Ride, Sport என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 4.3-inch TFT டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, OTA அப்டேட்ஸ், டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், 27.2 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ், CBS பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த மாடல் விலை ரூ.1.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2026 இறுதிக்குள், இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என Hero MotoCorp அறிவித்துள்ளது.