கடும் வெப்ப அலை தீவிரம்: Île-de-France உட்பட 37 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
12 ஆடி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 288
கடும் வெப்ப அலை காரணமாக, தலைநகர் Paris மற்றும் Île-de-France பிராந்தியம் உள்ளிட்ட நாட்டின் வடமேற்கு பகுதிகளைச் சேர்ந்த 37 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 மாகாணங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கை நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக Météo France தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் வெப்பநிலை 40 °Cஐ தாண்டக்கூடும் என எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது. la Loire ஆற்றின் தென்பகுதிகளில் 38 முதல் 42 °C வரை வெப்பம் பதிவாகும் எனவும், ஏனைய பகுதிகளில் 33 முதல் 38 °C வரை வெப்பநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொர்சிகா தீவும் மத்தியதரைக் கடலோரப் பகுதிகளும் கடுமையான வெப்பத்திலிருந்து ஓரளவு தப்பியுள்ளன. இருப்பினும், நாட்டை ஆக்கிரமித்துள்ள மிக அதிக வெப்பமுடைய காற்று காரணமாக இந்த வெப்ப அலை குறைந்தது அடுத்த வார நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் Météo France குறிப்பிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire