கனடாவில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி, ஐவர் காயம்!
12 ஆடி 2026 ஞாயிறு 05:35 | பார்வைகள் : 129
கனடாவின் டொராண்டோ நகரில் சனிக்கிழமை 11.07.2026 இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிக் சூட்டில் காயமடைந்த ஐந்து பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும். காயமடைந்த ஏனையவர்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து, பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரின் கைது நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் மேலதிக விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire