மீண்டும் இணைந்த வெற்றிமாறன் – தனுஷ் வெற்றிக் கூட்டணி..
11 ஆடி 2026 சனி 17:30 | பார்வைகள் : 136
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் காம்போவில் உருவாக உள்ள புதிய படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் ஒன்றாக இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தனுஷின் படங்கள் பார்க்கப்படுகின்றன. இவர்களது காம்போவில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன.
வெற்றிமாறன் தற்போது இயக்கி வரக்கூடிய அரசன் படத்தில் தனுஷ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அரசன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிம்பு முன்னணி கேரக்டரில் நடிக்கிறார். வடசென்னை படத்தின் சொல்லப்படாத கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் முதல் முறையாக வெற்றிமாறன் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த படத்துக்கு தமிழ் முருகன் என்று டைட்டில் வைத்துள்ளார்கள். முதன்முறையாக பீரியட் படத்தை வெற்றிமாறன் தமிழ் முருகன் மூலமாக இயக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் முதன் முறையாக இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் வெற்றிமாறன் தமிழ் முருகன் படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த படம் குறித்து 2 நாட்களாகவே தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு கைவசம் படங்கள் உள்ள நிலையில் அவைகளை விரைந்து முடித்து தமிழ் முருகன் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire