Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் படத்துக்கு A சான்றிதழ்!

ஜனநாயகன் படத்துக்கு A சான்றிதழ்!

11 ஆடி 2026 சனி 17:23 | பார்வைகள் : 140


நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் விஜய். 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய்க்கு பெண்களும், குழந்தைகளும் ரசிகர்களாக மாறினார்கள். ரஜினிக்கு பின் குழந்தைகளை கவர்ந்த ஒரு நடிகராக விஜய் மாறினார். அதுவே அவரின் பட வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது.

இந்நிலையில்தான் ஜனநாயகன் படத்திற்கு தற்போதைய தணிக்கை வாரியம் A சான்றிதழ் கொடுத்திருக்கிறது. படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதே அதற்கு காரணம் என சொல்லப்பட்டிருக்கிறது. விஜயின் சினிமா கெரியரில் இதுவரை அவர் நடிப்பில் வெளியான எந்த படத்திற்கும் A சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.

சென்சார் விதிப்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஜனநாயகனை தியேட்டரில் சென்று பார்க்க முடியும். கண்டிப்பாக பெரிய மால்களில் இதை பின்பற்றுவார்கள். ஆனால், விஜய்க்கு குழந்தைகள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். எனவே குழந்தைகள் பார்க்கும் படமாக ஜனநாயகன் இருக்குமா என்பது தெரியவில்லை. குழந்தைகள் பார்க்கவில்லை என்றால் குடும்பத்துடன் படம் பார்க்க பலரும் செல்ல மாட்டார்கள். இது ஜனநாயகன் படத்தின் வசூலை பாதிக்கவும் வாய்ப்புண்டு. அதேநேரம், தனி தியேட்டர்களில் இதை பின்பற்றமாட்டார்கள். அங்கே 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே இணையத்தில் முழு படமும் லீக் ஆகி கோடி பேர் வரை படம் பார்த்துவிட்டனர். தற்போது A சான்றிதழ் காரணமாகவும்  ஜனநாயகனின் வசூல் பாதிக்க வாய்ப்புண்டு.