கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை வீசிய ரஷ்யா
11 ஆடி 2026 சனி 13:22 | பார்வைகள் : 138
ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர்.
உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கீவ் மீது சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பே, அதிகாலை நேரத்தில் பலத்த வெடிசத்தங்கள் கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையில், ரஷ்யா 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire