பிலிப்பைன்ஸில் கனமழை பேரிடர் - நிலச்சரிவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
11 ஆடி 2026 சனி 07:05 | பார்வைகள் : 136
ஆசிய நாடான பிலிப்பைன்ஸை 'பவி' புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியான கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரன்கனி மாகாணத்தின் மிண்டனாவோ தீவில் உள்ள மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், லனாவோ டெல் சூர் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire