Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை: மருத்துவமனைகளுக்கு 100 மில்லியன் யூரோக்களில் குளிரூட்டி சாதனங்கள் கொள்வனவு!!

கடும் வெப்ப அலை: மருத்துவமனைகளுக்கு 100 மில்லியன் யூரோக்களில் குளிரூட்டி சாதனங்கள் கொள்வனவு!!

11 ஆடி 2026 சனி 07:30 | பார்வைகள் : 268


நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை சமாளிக்கும் நோக்கில், மருத்துவ மற்றும் சமூக பராமரிப்பு நிறுவனங்களுக்கு இதுவரை 7,500 குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Stéphanie Rist அறிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி 30,000 குளிரூட்டி சாதனங்கள் கொள்வனவு செய்வதற்கான திட்டத்தை ஆரம்பித்திருந்தது.

அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மொத்த 30,000 குளிரூட்டிகளில் தற்போது நான்கில் ஒரு பகுதி மருத்துவமனைகள் மற்றும் சமூக பராமரிப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நோயாளிகள் மற்றும் முதியோர்களை அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் 15,000 குளிர்சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாத தொடக்கத்திற்குள் 30,000 என்ற இலக்கை முழுமையாக அடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் Stéphanie Rist தெரிவித்தார். இதற்காக 100 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான விசேட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.