முதல்முறையாக இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்தியா - மோசமான 5 சாதனைகள்
10 ஆடி 2026 வெள்ளி 16:16 | பார்வைகள் : 130
இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்திய அணி, 5 மோசமான சாதனைகளை படைத்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று பிரிஸ்டல் நகரில் உள்ள கவுன்டி மைதானத்தில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 80 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஹாரி புரூக், 35 பந்துகளில் 79 ஓட்டங்களும், பில் சால்ட் 42 பந்துகளில் 59 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம், 37 பந்துகள் மீதம் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2, 3 மற்றும் 4ஆவது போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி T20 தொடரை வென்றுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இங்கிலாந்திடம் இருதரப்பு தொடரை இழந்துள்ளது.
இரு தரப்பு தொடரில், இங்கிலாந்திடம் இந்தியா T20 தொடரை இழப்பது இதுவே முதல்முறை ஆகும். 2014 ஆம் ஆண்டில் ஒரே ஒரு T20 போட்டியில் தோற்றது.
சமீபத்தில் அயர்லாந்திடம் தொடரை இழந்த இந்திய அணி, கடந்த 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 டி20 தொடர்களை இழந்த முதல் நிகழ்வு இதுவாகும்.
தொடர்ச்சியாக 2 தொடர்களை இழந்த இரண்டாவது இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். முன்னதாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் 1-2, 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அணித்தலைவராக அறிமுகமானதும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் நாணய சுழற்சியில் வென்று விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். ஆனால் அதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire