Paristamil Navigation Paristamil advert login

சிக்மா' பட ஆடியோ விழாவில் விஜய் பங்கேற்பாரா?

சிக்மா' பட ஆடியோ விழாவில் விஜய் பங்கேற்பாரா?

9 ஆடி 2026 வியாழன் 16:34 | பார்வைகள் : 133


தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்துள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், சஞ்சயின் தந்தை என்ற முறையில் முதல்வர் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், சஞ்சயின் தாயார் சங்கீதா இந்த இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தனது முதல் படத்தின் ஆடியோ விழாவிற்குத் தந்தை விஜய், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபா ஆகிய ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழைக்க ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக குடும்ப நிகழ்வுகளில் ஒன்றாக காணப்படாத இவர்கள், இந்த விழாவின் மூலம் மீண்டும் ஒரே மேடையில் இணைய வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. விரைவில் இந்த இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் இந்த விழாவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்