இதயம் முரளி படம் இதயத்தில் இடம் பிடிக்குமா ?
9 ஆடி 2026 வியாழன் 16:28 | பார்வைகள் : 131
தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல் பற்றிய படங்களில் டாப் 10 படங்களில் "இதயம்" படத்திற்கென்று ஒரு தனி இடமுண்டு.
கதிர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடிப்பில் 1991ல் வெளிவந்த படம். 100 நாட்களைக் கடந்து ஓடி விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கப்படுபவையாக உள்ளது.
அதன்பிறகு காதலை சொல்லத் தவிக்கும் இளைஞர்களை "இதயம் முரளி" என்று அழைக்கும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்களிடம் பதிந்துவிட்டது. அதே பெயரில் "இதயம்" நாயகன் முரளியின் மகன் அதர்வா நடிக்க உருவாகியுள்ள "இதயம் முரளி" படம் நாளை வெளியாக உள்ளது.
நடிகர் முரளிக்கு இதயம் படம் ஒரு முக்கியமான படமாக அவரது திரைப்பயணத்தில் அமைந்தது. அவர் பெயரைச் சொன்னாலே "இதயம்" என்பதுதான் முதலில் வந்து நிற்கும்.
அவரது வாரிசான அதர்வா தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அனாலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் இருக்கிறார். "இதயம் முரளி" படம் அவருக்கான ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுக்கும் படமாக அமையுமா என்பது நாளை தெரிந்துவிடும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire