Paristamil Navigation Paristamil advert login

பிரபாஸ் கல்யாணம் எப்போ?

பிரபாஸ் கல்யாணம் எப்போ?

9 ஆடி 2026 வியாழன் 16:23 | பார்வைகள் : 131


பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ், ஹைதராபாத்தின் காஸ்ட்லியான பகுதியில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டைக் கட்டி வருகிறார். இந்த செய்தி டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த வீடு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த 200 கோடி பங்களாவை, பிரபாஸ் தனது வருங்கால மனைவிக்கு பரிசாக வழங்கப் போகிறார் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஒரு தொழிலதிபரின் மகளை அவர் திருமணம் செய்யப் போவதாகவும், திருமண ஏற்பாடுகளை அவரது பெரியம்மா ஷ்யாமளா தேவி கவனித்து வருவதாகவும் வதந்திகள் பரவுகின்றன. திருமணத்திற்குள் இந்த வீட்டை கட்டி முடிக்க பிரபாஸ் குடும்பம் திட்டமிட்டுள்ளதாம்.

பிரபாஸ் வீடு கட்டுவது உண்மைதான். ஆனால், அவரது திருமணம் குறித்த செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. பிரபாஸ் தரப்பிலிருந்தோ அல்லது அவரது டீமிடமிருந்தோ இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஒவ்வொரு சீசனிலும் பிரபாஸின் திருமணம் பற்றி இப்படி செய்திகள் வருவது சகஜம்தான். இந்த முறை, புதிய வீட்டுடன் முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள்.

முன்பு அனுஷ்கா ஷெட்டி, கிருத்தி சனோன் போன்ற நடிகைகளுடன் பிரபாஸுக்கு திருமணம் என பல செய்திகள் வந்தன. தற்போது 46 வயதாகும் பிரபாஸ், முழு கவனத்தையும் படங்களில் வைத்துள்ளார். 'சலார்-2', 'கல்கி-2', 'ஸ்பிரிட்' என அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் புல்லாகி இருக்கிறது. அதனால், அடுத்த ஆண்டு திருமணம் என்பது சந்தேகம்தான். 'டார்லிங்' ரசிகர்களின் இந்த ஆசை எப்போது நிறைவேறுமெனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.