1.34 லட்ச ரூபாய் போனை வெளியிட்டுள்ள பிஎஸ்என்எல் - என்ன சிறப்பம்சங்கள்?
9 ஆடி 2026 வியாழன் 14:51 | பார்வைகள் : 129
ரூ.1.34 லட்சம் மதிப்பிலான சேட்டிலைட் போனை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்(BSNL), ரூ1.34 லட்சம் மதிப்பிலான செயற்கைகோள் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏறத்தாழ ஐபோன் 17 விலைக்கு அருகே உள்ளது.
இந்த சேட்டிலைட் போன் வழக்கமான நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், நெட்வொர்க் இணைப்பு இல்லாத பகுதிகளில் கூட இதனை பயன்படுத்தி பேச முடியும். இது அவசர காலங்களில் அல்லது வழக்கமான தொலைத்தொடர்பு இல்லாத காடு மற்றும் மலைப்பகுதிகளில் பயனுள்ளதாக அமையும்.
மேலும், சார்ஜ் செய்யும் வசதிகள் இல்லாத இடங்களில் நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் பேட்டரி ஆயுள் நீடிக்கும். சவாலான சூழல்களுக்காக உருவாக்கப்பட்ட உறுதியான மற்றும் நீடித்து உழைக்கும் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பாதுகாப்புத் துறை, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்கத் தொழில், ஆகியவற்றில் பணியாற்றுவோர், டவர் இல்லாத பகுதிகள் வழியாக ஆன்மீக பயணம் செல்பவர்கள் மற்றும் சாகசப் பயணம் செல்பவர்கள் ஆகியோருக்கு இந்த சேட்டிலைட் போன் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் சேட்டிலைட் போன் பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளதால், பொதுமக்கள் இதனை எளிதாக வாங்கி விட முடியாது.
இதனை வாங்குவதற்கு தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து முதலில் அனுமதி பெற வேண்டும்.
இந்த சேட்டிலைட் போன் தொடர்பான மேலதிக தகவல்களை அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திலோ, அல்லது +91 9465101323 என்ற எண்ணிலோ அழைத்து தெரிந்து கொள்ளாலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire