எம்பாப்பேயின் தாயை கேவலமாகப் பாராளுமற்றத்தில் பேசிய அமெரில்லா!
9 ஆடி 2026 வியாழன் 06:33 | பார்வைகள் : 418
பிரான்சில் விசாரணை தொடக்கம்- பராகுவே செனட்டர் செலெஸ்டே அமரில்லா, சமீபத்தில் சமூக வலைதளங்களில் கிலியன் எம்பப்பே மீது, இனவெறி அவதூறுகள் செய்திருந்தார்.
இப்போது, ஜூலை 8 அன்று நடைபெற்ற பராகுவே செனட் கூட்டத்திலேயே, அவர் எம்பப்பேவை இகழ்ந்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேரடி அவதூறு
செனட் கூட்டத்தில், எம்பப்பே — Orlando Gill இடையேயான, போட்டி பிந்தைய சம்பவத்தைப் பற்றி பேசும்போது,
அமரில்லா,
“ஒர்லாண்டோ கில், உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும், ஒரு பணிவான பராகுவே இளைஞன்,கையை நீட்டியபோது, தாயைக் கேவலப்படுத்தி, அந்த fils de p* (அவதூறு), அவனுடன் கை கொடுக்க மறுத்து முகத்தில் கத்தினான்.
இது பிரெஞ்சு மக்கள் செய்யும் செயல் அல்ல.”
“பிரான்ஸ் என்பது ரூசோ, தெஸ்கார்ட்ஸ், மொன்தெஸ்கியு, விக்டர் ஹ்யூகோ,
சிமோன் து போவார், மனித உரிமைகள் அறிவிப்பு, இந்த பெரிய கலாச்சார பாரம்பரியத்தை, எம்பப்பேவாகக் குறைக்க நான் மறுக்கிறேன்.”
முன்னர் வெளியிட்ட இனவெறி பதிவுகள்
ஜூலை 4 போட்டிக்குப் பிறகு,
அமரில்லா எம்பப்பே குறித்து, இனவெறி + அவதூறு + இழிவான பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
“இந்த முட்டாள் எழுதத் தெரியாது.”
“தாய்ப்பாலுக்கு பதிலாக தேங்காய் குடித்தவன்.”
“அவன் கேட்ட கல்வியுள்ளவர்கள் சிம்பான்சிகள்.”
இவை அனைத்தும் பிரான்ஸ் சட்டத்தில், இனவெறி காரணமாக அவதூறு, வெறுப்புக்கு தூண்டுதல் எனக் கருதப்படும் குற்றங்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire