Paristamil Navigation Paristamil advert login

சூடானில் பொதுமக்கள் பயணித்த வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல் ! 25 பேர் பலி

சூடானில் பொதுமக்கள் பயணித்த வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல் ! 25 பேர் பலி

9 ஆடி 2026 வியாழன் 05:44 | பார்வைகள் : 157


சூடான் நாட்டில் பொதுமக்கள் பயணித்த வாகனங்களைக் குறிவைத்து கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட வெவ்வேறு ட்ரோன் தாக்குதல்களில், பெண்கள் உள்பட 25 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைநகா் காா்ட்டூமின் புகா்ப் பகுதியில் உள்ள ஓம்துா்மான் நகருக்கு மேற்கே, திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 10 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்

இதேபோல், வடக்கு கோா்டோஃபன் மாகாணத்தில் உள்ள அல்-ஷாத்தூத் நகரில் திருமண வீட்டாருடன் சென்ற மற்றொரு வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஒரு போக்குவரத்து வாகனத்தின் மீதும் நடத்தப்பட்டுள்ளதுடன்  இவ்விரு ட்ரோன் தாக்குதல்களில் மேலும் 15 போ் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகற்கள் செய்தி வெளியிட்டுள்ளன.