வயநாடு மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்; அமித் ஷா உறுதி
9 ஆடி 2026 வியாழன் 10:04 | பார்வைகள் : 130
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டம் மேப்பாடி கிராம ஊராட்சியில் உள்ள கள்ளாடி சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். மாயமான சிலரை தேடும் பணி 2ம் நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.
நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள முதல்வர் சதீசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வர் சதீசனிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது, கேரள அரசு மேற்கொண்டுள்ள உடனடித் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அமித் ஷா பாராட்டியுள்ளார்.
இந்த நிலச்சரிவு குறித்து உயர்தர விசாரணை நடத்த வலியுறுத்திய அவர், மத்திய அரசின் சார்பில் கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire