புவியைக் கடந்த பெரிய விண்கல்!
29 கார்த்திகை 2020 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 15207
உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவைவிட அளவில் பெரிய விண்கல் இன்று புவியின் அருகில் கடந்துசென்றது.
இரண்டாயிரமாவது ஆண்டில் அமெரிக்காவின் நாசா அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட WO107 என்கிற விண்கல் 800 மீட்டர் உயரமும் 500 மீட்டர் அகலமும் உடையது என அளவிடப்பட்டுள்ளது.
இந்த விண்கல் புவியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விண்கல் அதன் சுற்றுவட்டப் பாதையில் புவியின் மீது மோதாமல் பாதுகாப்பான தொலைவில் இன்று கடந்து சென்றது.
புவிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவை விட அதிகமான தொலைவில் விண்கல் கடந்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan