Paristamil Navigation Paristamil advert login

சிறையில் இருக்கும் இந்தியர்கள் 188 பேரை விடுவிக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

சிறையில் இருக்கும் இந்தியர்கள் 188 பேரை விடுவிக்க வேண்டும்:  இந்தியா வலியுறுத்தல்

2 ஆடி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 186


பாகிஸ்தான் சிறையில் இருக்கும்  இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகள் 188 பேரை விடுவித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என அந்நாட்டிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி  1 மற்றும் ஜூலை 1 ஆகிய நாடுகளில்,  இருநாடுகளும் தங்கள் காவலில் இருக்கும் இரு நாட்டு மீனவர்கள், கைதிகள் மற்றும் பொது மக்கள் குறித்த தகவல்கள் பரிமாறிகொள்வது கட்டாயம்.இதன்படி, டில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் தூதரங்கள் மூலம் காவலில் உள்ளவர்கள் குறித்த பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இதன்படி,  பாகிஸ்தானியர்கள் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்புடும். 386 சிவில் கைதிகள், 53 மீனவர்கள் இந்திய சிறைகளில் உள்ளனர்.

அதேபோல், பாகிஸ்தான் சிறைகளில் இந்தியர்கள் அல்லதுஇந்தியாவைச் சேர்ந்தவர்கள்  52 சிவில் கைதிகள் மற்றும் 198 மீனவர்கள்  அடைக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  பாகிஸ்தானின் காவலில் இருக்கும் காணாமல் போன இந்திய பாதுகாப்புப்படையினர், அப்பாவி கைதிகள், மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என  பாகிஸ்தானிடம் வலியுறுத்தி உள்ளோம்.

தண்டனை காலம் முடிந்த 188 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.மேலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 13 சிவில் கைதிகளுக்கு தூதரக உதவிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்  எனக்கூறப்பட்டு உள்ளதுடன், இந்தியர்கள் அல்லது இந்தியர்கள்  என நம்பப்படுபவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன் அவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசின் தொடர் முயற்சி காரணமாக,  கடந்த 2014 முதல் பாகிஸ்தான் சிறையில் இருந்த 2,661 இந்திய மீனவர்கள்,78 சிவில் கைதிகள் ஆகியோர்  பத்திரமாக தாயகம் கொண்டு வரப்பட்டனர்.அதில் 2023ம் ஆண்டில் இருந்து 500 மீனவர்கள் மற்றும் 20 சிவில்கைதிகள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.