Paristamil Navigation Paristamil advert login

ரூ.258 கோடி போதை பொருள் பறிமுதல் எதிரொலி; அமலாக்கத்துறை அதிரடி சோதனை

ரூ.258 கோடி போதை பொருள் பறிமுதல் எதிரொலி; அமலாக்கத்துறை அதிரடி சோதனை

27 வைகாசி 2026 புதன் 11:51 | பார்வைகள் : 138


ரூ.258 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை, மதுரையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

2024ம் ஆண்டு பிப். 29ம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு படையுடன் சோதனை நடத்தினர்.

சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் சிக்கியது.  இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.108 கோடியாகும். இதேபோன்று சென்னை விமான நிலையத்தில் கோகைய்ன் போதை பொருள் அடங்கிய பார்சல் சிக்கியது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 29.7 கோடியாகும்.

அதே ஆண்டில் மார்ச் 5ம் தேதி மன்னார் வளைகுடாவில் இலங்கையை நோக்கி சென்ற படகு ஒன்றில் சோதனை நடத்தி, 97 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.108 கோடி. இந்த போதை பொருள் கடத்தலின் பின்னணியில் முக்கிய நபராக ஜான் பிரிட்டோ என்ற நபர் உள்ளதை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கண்டறிந்தனர்.

இந் நிலையில், சென்னை மற்றும் மதுரையில் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ள நபர்கள் பற்றிய விவரங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.