அதிமுகவில் சமாதானப்பேச்சு; ஒன்றிணையும் வாய்ப்பு அதிகரிப்பு
27 வைகாசி 2026 புதன் 06:23 | பார்வைகள் : 134
அதிமுகவில் இபிஎஸ், வேலுமணி தரப்பினர் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடந்தது. இதில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், கோஷ்டிகள் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் பிளவு உருவானது, இபிஎஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் ஒரு பிரிவாகவும் எம்எல்ஏக்கள் செயல்பட்டனர். தவெக அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிரான நிலைப்பாடு எடுக்க, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவாக ஓட்டு போட்டனர்.
அதன் பலனாக, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் உண்டு என்று பேசப்பட்டது. ஆனால் கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு அளித்து இருந்தனர். வேலுமணி தரப்பிலும் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான ஆய்வு பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருந்தார்.
அதே நேரத்தில், வேலுமணி தரப்பில் இருந்த எம்எல்ஏக்கள் 5 பேர், இபிஎஸ் அணியில் ஐக்கியம் ஆகினர். இன்னொரு 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகினர். இந்நிலையில், ஓசூர் அதிமுக எம்எல்ஏவான பாலகிருஷ்ணரெட்டி இபிஎஸ்சை இன்று சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். அவர் மீதான நடவடிக்கையை கைவிடும்படி இபிஎஸ் தரப்பினர் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து விட்டனர்.
பாலகிருஷ்ண ரெட்டி அணி மாறியதால் இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 28 ஆக அதிகரித்தது. வேலுமணி தரப்பினர் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது.
தங்கள் தரப்பில் பலவீனம் அதிகரித்த நிலையில், இபிஎஸ் உடன் சமாதானப்பேச்சு நடத்த வேலுமணி தரப்பினர் முன்வந்தனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏ.,க்கள் அருண்மொழித்தேவன், ரவி மனோகரன், திருத்தணி அரி ஆகியோர் சென்னையில் சந்தித்து இபிஎஸ் வீட்டுக்கு சென்றனர்.
இபிஎஸ் உடன் நேருக்கு நேர் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவில் இரு தரப்பினரும் கட்சி ஒன்றிணையும் உடன்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப்புள்ளிகள் இன்னும் இபிஎஸ் உடன் பேசவில்லை. இதனால் அறிவிப்பு வெளியிடுவது தாமதம் ஆகி வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan