Paristamil Navigation Paristamil advert login

மேலதிகமாக 2,40,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கவுள்ளதாக மக்ரோன் அறிவிப்பு!!

மேலதிகமாக 2,40,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கவுள்ளதாக மக்ரோன் அறிவிப்பு!!

26 வைகாசி 2026 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 182


மின்சார வாகனங்களுக்கான கூடுதல் 2,40,000 சார்ஜிங் நிலையங்களை 2030க்குள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இதில் 60,000 வேகமான மற்றும் அதிவேக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று, ஆற்றல் பயன்பாடுகளின் மின்மயமாக்கல் தொடர்பாக இன்று எலிசே அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1,85,000க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களுக்கு மேலதிகமாகும். “2030க்குள் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் 4,00,000 சார்ஜிங் நிலையங்களைகளை எட்டுவதே எங்கள் இலக்கு” என்று மக்ரோன் விளக்கினார். “Electra நிறுவனம் 2030க்குள் 300 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யும். Engieயும் அதேபோல் முதலீடு செய்யும். 

மேலும், குறிப்பாக லெக்லெர்க் போன்ற பெரிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் 2030க்குள் 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்க உறுதியளித்துள்ளதை நான் பாராட்டுகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.