வரலாறு காணாத வெப்ப அலை : பல நகரங்களில் புதிய வெப்ப சாதனைகள் பதிவு!!
25 வைகாசி 2026 திங்கள் 21:27 | பார்வைகள் : 255
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மே மாதத்திலேயே வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக பல நகரங்களில் புதிய வெப்ப சாதனைகள் பதிவாகியுள்ளன. Nantes பகுதியில் 34.3°C, Angers 34°C மற்றும் Brest பகுதியில் 33°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரிஸ் நகரிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக 30°C-ஐ கடந்த வெப்பம் பதிவாகியதுடன், ஞாயிற்றுக்கிழமை 32.6°C வரை உயர்ந்தது. இதையடுத்து மேற்கு பிரான்சின் எட்டு மாகாணங்களுக்கு 'செம்மஞ்சள்’ வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் முறையாக மே மாதத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபூர்வ வெப்ப நிலைக்கு உலகளாவிய காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan