அதிமுக தொண்டர்கள் தவெகவை ஒரு புதிய அதிமுகவாக பார்க்கின்றனர்; அமைச்சர் ஆதவ்
26 வைகாசி 2026 செவ்வாய் 09:08 | பார்வைகள் : 166
அதிமுக தொண்டர்கள் தவெகவை ஒரு புதிய அதிமுகவாக பார்க்கின்றனர் என்று அமைச்சர் ஆதவ் கூறி உள்ளார்.
பனையூரில் அவர் அளித்த பேட்டி;
2026 தேர்தலில் திமுக தோற்றதில் இருந்து குறிப்பாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து தோற்றதில் இருந்து, ஏன் தோற்றோம் என்று கூட புரியாமல் இன்ஸ்டாகிராமால் தோற்றோம் என்று போலி பிரசாரத்தை உருவாக்குகின்றனர். தேர்தலின் போது பொய்யான பிரசாரத்தை மக்கள் தூக்கி எறிந்தனர். இபிஎஸ்சுக்கு ஓட்டு போட்டால் பாஜவுக்கு ஓட்டு போட்டது போல் என்று தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் கூறி வந்தார்.
தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒரு பெரிய அதிசயம் தமிழகத்தில் நிகழ்ந்தது. திமுக, அதிமுக, பாஜ இணைந்து இபிஎஸ்சை முதல்வராக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி பார்த்தனர். மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஒரு ஆட்சியை உருவாக்க முனைந்தனர். தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சியமைக்கும் என்று கம்யூனிஸ்ட் தலைவர் பேபி கூறினார். இதற்கு திமுக தலைவர் பதில் அளிக்கவில்லை.
ஆனால் அவருடன் இருந்த அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எங்களை அழைத்து பேசினார்கள், இப்படி சேர்ந்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டார்கள் என கூறியிருக்கின்றனர். சந்தர்ப்பவாத அரசியலை திட்டமிட்டு சதி செய்தது திமுக. அதை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்தோம். கம்யூனிஸ்ட் எதிர்த்ததால் இபிஎஸ்சை முதல்வராக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன.
தவெகவை ஒரு புதிய அதிமுகவாக, அதிமுகவினர் நினைக்கின்றனர். எனவே ஒவ்வொருத்தரும் மக்கள் சேவை அளிக்க தவெகவுக்கு வந்தனர். 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது குதிரை பேரம் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஓபிஎஸ், வைத்திலிங்கம் இவர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேரும் போது அது குதிரைபேரம் கிடையாதா?
அதிமுக தொண்டர்களை நாங்கள் வரவேற்கிறோம். முன்னாள் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் எங்களிடம் பேசி வருகின்றனர். ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய எல்லா அரசியல் அதிகாரமும் இருக்கிறது. எனவே மக்கள் முன்பு நேர்மையாக தமது பதவியை ராஜினாமா செய்து என்னை சந்தித்தனர். முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இடைத்தேர்தலில் தவெக மிக பெரிய வெற்றி பெறும்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு முன்னாள் எம்எல்ஏவாக அமைச்சரை தலைமைச் செயலகத்தில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். சட்டசபையில் இபிஎஸ்சை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பை அப்போது சபாநாயகர் அப்பாவு ஆதரித்தார்.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan