விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
26 வைகாசி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 166
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் அரசு கடன் தள்ளுபடிதிட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறையின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். இந்த விதிமுறையின்படி 2025 மே 1 முதல், 2026 பிப்.,28 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனானது கீழ்கண்டவாறு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரூ.50 ஆயிரம் வரை
குறு விவசாயிகளின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி
சிறு விவசாயிகளுக்கான கடன் தொகை 50 சதவீதம் தள்ளுபடி
50,001 முதல் 60 ஆயிரம் வரை
குறு விவசாயிகளுக்கு 40 ஆயிரமும்
சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரமும்
60,001 முதல் 70 ஆயிரம் வரை
குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரமும்,
சிறு விவசாயிகளுக்கு 15 ஆயிரமும்
70,001- 80 ஆயிரம் வரை
குறு விவசாயிகளுக்கு 20 ஆயிரமும்
சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரமும்
80,001 முதல் 90 ஆயிரம் வரை
குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரமும்
சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரமும்
90,001 முதல் ஒரு லட்சம் வரை
குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரமும்
சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரமும்
ஒரு லட்சத்துக்கு மேல்
சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன் தொகையில் 5 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பயர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தால், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14 லட்சத்து 22 ஆயிரத்து 555 விவசாயிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan