Paristamil Navigation Paristamil advert login

மைதானத்திலே மாரடைப்பு - கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

மைதானத்திலே மாரடைப்பு - கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

25 வைகாசி 2026 திங்கள் 12:42 | பார்வைகள் : 135


மைதானத்திலே ஏற்பட்ட மாரடைப்பால் கிரிக்கெட் வீரர் எஸ்.எல்.அக்சய் உயிரிழந்துள்ளார்.

39 வயதான எஸ்.எல்.அக்சய்(L.S.Akshay), கர்நாடகா அணிக்காக 6 முதல் தரப் போட்டிகளிலும் , 3 லிஸ்ட் ஏ தொடர்களிலும், 9 T20 போட்டிகளிலும் விளையாடிய மிதவேகப் பந்துவீச்சாளர் ஆவார்.  

மேலும், 2014 - 2015 ரஞ்சி கோப்பை வென்ற கர்நாடக அணியில் எஸ்.எல்.அக்சய் இடம் பெற்றிருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் U19 கர்நாடக அணியின் பயிற்சியாளராக தனது பங்களிப்பை வழங்கினார்.
நேற்று எஸ்.எல்.எஸ். கிரீடங்கனாவில் சஃபையர் சிசி அணிக்காக கே.எஸ்.சி.ஏ. மூன்றாம் பிரிவு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த அக்ஷய் 4 ஓவர்கள் பந்து வீசிய பின்னர், ஸ்லிப் நின்ற போது வலியால் துடித்தார்.

இதனையடுத்து, உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கர்நாடக கிரிக்கெட் சங்கம், ஒரு இளநிலை பயிற்சியாளராக, இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

அதன் மூலம், மாநிலத்தில் கிரிக்கெட் திறமைகளின் வளர்ச்சியில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்" என கூறியுள்ளது.