Paristamil Navigation Paristamil advert login

இனி டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து - ஐசிசி பரிசீலனை

இனி டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து - ஐசிசி பரிசீலனை

25 வைகாசி 2026 திங்கள் 11:36 | பார்வைகள் : 147


சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வது ஐசிசி பரிசீலித்து வருகிறது.

ஐசிசி தலைமைச் செயல் அதிகாரிகள் குழுவின் காணொளிக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் நிற பந்து பயன்படுத்துவது, இடைவேளையில் பயிற்சியாளரை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் சௌரவ் கங்குலியும் கலந்துகொண்டார்.

டெஸ்ட் போட்டிகளின் போது மோசமான வானிலையில் பாதிக்கப்பட்டால் அணிகள் சிவப்பு நிற பந்திலிருந்து இளஞ்சிவப்பு நிற பந்திற்கு மாறும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளது.

இரு அணிகளும் இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால், மின்விளக்குகளின் கீழ் ஆட்டம் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

இதே போல், ஒருநாள் போட்டிகளில் தற்போது இடைவேளையின் போது மாற்று வீரர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படும் சூழலில், தற்போது தலைமைப் பயிற்சியாளரும் மைதானத்தின் உள்ளே செல்லும் வகையில் விதி திருத்தப்பட உள்ளது.

T20 போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களுக்கான இடைவேளை நேரம் 20 நிமிடங்களாக உள்ள நிலையில் அதனை 15 நிமிடங்களாக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் போது பந்துவீச்சாளர்களின் சட்டவிரோதச் செயல்களைச் சரிபார்க்க, கள நடுவர்களுக்கு ஹாக்ஐ (HawkEye) தரவை அணுகும் வசதியை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு முறைகளைக் கொண்ட பந்துவீச்சாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐசிசி உறுதியாக உள்ளது.

மே 30 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த திருத்தங்கள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடும்.