வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்யும் ராகுல்! பாஜ குற்றச்சாட்டு
25 வைகாசி 2026 திங்கள் 11:15 | பார்வைகள் : 157
வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து வன்முறையைத் தூண்டி, மோடி அரசை கவிழ்க்க லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சதி செய்வதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தில், 'மோடி அரசு ஓராண்டுக்குள் கவிழும்,' என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜ தலைவர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் பதில் அளித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; ராகுலின் இந்தப் பேச்சு காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் 'டூல்கிட் கும்பல்'இணைந்து இந்தியாவைச் சீர்குலைக்கத் தீட்டியுள்ள ஒரு பெரிய சதியை அம்பலப்படுத்தியுள்ளது. இது சாதாரணமானதல்ல. நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு சதி.
நேரடித் தேர்தலில் பாஜவைத் தோற்கடிக்கவோ அல்லது மோடி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்கவோ முடியாது என்பதை உணர்ந்த ராகுலும், அவரது கூட்டாளிகளும், நாடு முழுவதும் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர். நாட்டில் நடக்கும் எந்த ஒரு நேர்மறையான விஷயத்தையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan