பயங்கரவாதம் சவாலாகவே நீடிக்கிறது!ஜெய்சங்கர்
25 வைகாசி 2026 திங்கள் 10:07 | பார்வைகள் : 168
பயங்கரவாதம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு பொதுவான சவாலாகவே நீடிக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடில்லியின் ஹைதராபாத் இல்லத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்மார்கோ ரூபியோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. பிறகு ஜெய்சங்கர் கூறியதாவது: தற்போது நிலவிவரும்புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இந்தியா, அமெரிக்கா இடையே உறவே வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பொதுவான நலன்கள் இருந்தாலும், சவால்களும் பொதுவானவை. பயங்கரவாதம் என்பது பொதுவான சவாலாகும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
அப்போது மார்கோ ரூபியோ கூறியதாவது:
நாம் விவாதிக்க வேண்டிய விஷயங்களும், இணைந்து செயல்பட வேண்டிய பணிகளும் ஏராளமாக உள்ளன. நாம் உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகள்; உலகின் பல பகுதிகளிலும் பல பிரச்சனைகள் நிலவுகிறது. அமெரிக்கா, இந்தியா இடையே உள்ள உறவு மிக முக்கியம்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் சில முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி சுங்கக் கட்டணமின்றி கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்திருக்க வேண்டும். இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan