Paristamil Navigation Paristamil advert login

2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

24 வைகாசி 2026 ஞாயிறு 16:50 | பார்வைகள் : 154


உலக பில்லியனர் பட்டியலில் அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார்.

2026-ல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியில் வெளியாகியுள்ளது.

Forbes வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக Billionaire Club-இல் இணைந்துள்ளார்.

2007-ஆம் ஆண்டு தனது தொழில்முறையாக கால்பந்தாட்ட விளையாட்டை தொடங்கிய மெஸ்ஸி, சம்பளம் மற்றும் போனஸ்கள் மூலம் மட்டும் 700 மில்லியன் டொலருக்கும் மேல் சம்பாதித்துள்ளார்.

தற்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் கிரிஸ்டியானோ ரொனால்டோ. 41 வயதான அவர், தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும், மொத்தம் ஆறாவது முறையாகவும் உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரராக தெரிவாகியுள்ளார்.

கடந்த 12 மாதங்களில் அவர் 300 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். இதில் 235 மில்லியன் அவரது Al-Nassr ஒப்பந்தத்திலிருந்து, 65 மில்லியன் விளம்பரங்கள், உரிமங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நடவடிக்கைகளிலிருந்து வந்துள்ளது.

2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்
கிரிஸ்டியானோ ரொனால்டோ (Football) – $235 மில்லியன்

கனேலோ ஆல்வாரெஸ் (Boxing) – $170 மில்லியன்

லியோனல் மெஸ்ஸி (Football) – $140 மில்லியன்

லெப்ரான் ஜேம்ஸ் (Basketball) – $137.8 மில்லியன்

ஷோஹெய் ஓத்தானி (Baseball) – $127.6 மில்லியன்

ஸ்டீபன் கரி (Basketball) – $124.7 மில்லியன்

ஜான் ராம் (Golf) – $107 மில்லியன்

கரீம் பென்சிமா (Football) – $104 மில்லியன்

கெவின் டுராண்ட் (Basketball) – $103.8 மில்லியன்

லூயிஸ் ஹாமில்டன் (Formula 1) – $100 மில்லியன்

மொத்தத்தில், உலகின் 10 முன்னணி விளையாட்டு வீரர்கள் கடந்த ஆண்டு 1.4 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளனர். 2016-இல் 635 மில்லியன் டொலர் இருந்ததை விட இது இரட்டிப்பு அளவாகும்.

இந்த பட்டியல், விளையாட்டு உலகில் சம்பளமும், விளம்பர வருமானமும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.