எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
25 வைகாசி 2026 திங்கள் 07:33 | பார்வைகள் : 126
எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆப்ரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இதை கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்க தவறினால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொற்று பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது. நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்தியக் குடிமக்கள், உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan