Paristamil Navigation Paristamil advert login

டிரம்பின் வரி மிரட்டலுக்கு மக்ரோனின் கடும் பதில்!!

டிரம்பின் வரி மிரட்டலுக்கு மக்ரோனின் கடும் பதில்!!

24 வைகாசி 2026 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 268


ஜனாதிபதி Emmanuel Macron, சுவிட்சர்லாந்தின் World Economic Forum மாநாட்டில் உரையாற்றியபோது, Donald Trump தலைமையிலான அமெரிக்காவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அழுத்தங்கள் மூலம் “ஐரோப்பாவை பலவீனப்படுத்தி, தங்களுக்குக் கீழ்ப்படையச் செய்ய முயற்சிக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் “அச்சுறுத்தலுக்கு பதிலாக மரியாதையையும், வன்முறைக்கு பதிலாக சட்டத்தின் ஆட்சியையும் நாம் விரும்புகிறோம்.” மேலும், “பலமானவர் சொல்வதே உலக ஒழுங்காக மாறக் கூடாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உரை, டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலின் பின்ணியில்  வந்துள்ளது. 

பிரான்ஸ், அமெரிக்கா முன்வைத்த “Peace Council” அமைப்பில் சேர மறுத்ததற்காக, பிரெஞ்சு வைன் மற்றும் ஷாம்பெய்ன் மீது 200% இறக்குமதி வரி விதிக்கலாம் என்று டிரம்ப் மிரட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த மக்ரோன், “பிரான்ஸும் ஐரோப்பாவும் தேசிய இறையாண்மைக்கும், ஐரோப்பிய நாடுகளின் சாசனத்திற்கும் உறுதியாக இணைந்திருக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் தனது வர்த்தக பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்த தயங்கக்கூடாது என்றும், தேவையானால் “anti-coercion instrument” போன்ற சக்திவாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

மக்ரோன், டிரம்பின் அணுகுமுறை குறித்து பேசும்போது, “அமெரிக்கா கூட்டாளி எனக் கூறினாலும், அதன் செயல்பாடுகள் சில சமயங்களில் அதற்கு ஏற்ப இல்லை” என்று குறிப்பிட்டார். இருப்பினும், “அதிர்ச்சியடையாமல் அமைதியாக இருந்து, ஐரோப்பாவின் நலன்களை பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உரை, அமெரிக்கா–ஐரோப்பா உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றத்தையும், ஐரோப்பாவின் “strategic autonomy” எனப்படும் சுயாதீன அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.