மத்தியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பாஜ ஆட்சி: ஆக்சிஸ் மை இந்தியா
22 வைகாசி 2026 வெள்ளி 08:42 | பார்வைகள் : 145
பாஜவின் ஆட்சி செயல்திறன் மோசம் ஆகாத வரையில், மத்தியில் அக்கட்சியின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் கூறியுளளார்.
ஏராளமான தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த நிறுவனம் ஆக்சிஸ் மை இந்தியா. இந்த நிறுவனம் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான விஜய் தவெக கட்சிக்கு 100க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்தது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா கூறியதாவது: மத்தியில் 2014ம் ஆண்டு துவங்கிய பாஜ ஆட்சி குறைந்தது 20 ஆண்டுகளாவது நீடிக்க வாய்ப்பு உள்ளது. பாஜவின் ஆட்சி செயல் திறன் குறையாத வரையில் மத்தியில் அக்கட்சியின் நிலை பாதுகாப்பாக இருக்கும்.
முன்பு 1977 ம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆட்சி செய்தது. அதன் பிறகு சிரமங்களை சந்திக்க துவங்கியது. அக்காலத்தில் சுமர் 20 ஆண்டுகள் நீடிக்கும் ஒரு அரசியல் தலைமுறையை பற்றி நாம் பேசுவது உண்டு. அந்த 20 ஆண்டு கால சுழற்சி இப்போதும் தொடரும். இதன் மூலம் பாஜவும், நீண்ட காலத்திற்கு இந்திய அரசியலின் மையத் தூணாக திகழும்.
மக்களின் மிகப்பெரிய உத்தரவை பெற்றுள்ள பாஜ மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. எனவே பாஜவும், தேஜவும் இனி சிறப்பாக செயல்பட வேண்டும்.
அவர்களின் செயல்பாடு பலவீனமாகவோ அல்லது மோசமாகவோ மாறும் வரை பாஜ தொடர்ந்து வெற்றி பெறும். எதிரணி தொடர்ந்து தோல்வியடையும்.
15 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், மக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற குறைந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகளாவது ஆகலாம் என நான் கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan