ஐரோப்பிய ஒன்றியம், வெளிநாடுகளில் குடியேற்ற முகாம்கள் அமைக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு!!
21 வைகாசி 2026 வியாழன் 15:21 | பார்வைகள் : 135
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கை சீர்திருத்தம் அமுலுக்கு வரும் திகதியைப் பற்றிய இறுதி முரண்பாட்டில், உறுப்புநாடுகளும் ஐரோப்பிய பாராளுமன்றமும் இன்று உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
சுமார் பத்து நாட்கள் ஒத்திவைப்பு. உறுப்புநாடுகளும் ஐரோப்பிய பாராளுமன்றமும், இன்னும் தீராத முக்கிய பிரச்சினையான இந்தச் சட்டம் எப்போது அமுலுக்கு வரும் என்பதைக் குறித்து விவாதங்களை ஜூன் 1ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளன.
மார்ச் மாத இறுதியில், ஐரோப்பிய பாராளுமன்றம் குடியேற்றக் கொள்கையில் கடுமையான மாற்றத்தை ஆதரித்து, “திரும்ப அனுப்பும் மையங்கள்” (hubs de retour) என்ற கருத்தை ஒப்புதல் அளித்தது. இந்த மையங்கள் மூலம், குடியேற்றக்காரர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப முடியும்.
இந்த நடவடிக்கைகள், வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், பெரும்பாலான உறுப்புநாடுகளாலும் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இடதுசாரி கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் (les ONG) இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்ற உத்தரவு பெறும் குடியேற்றக்காரர்களில் சுமார் 20% பேர் மட்டுமே உண்மையில் வெளியேற்றப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை, கடுமையான குடியேற்றக் கொள்கையை ஆதரிப்பவர்களால் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan