படித்தவுடன் அழிந்துவிடும் - WhatsApp-ன் புதிய வசதி
21 வைகாசி 2026 வியாழன் 13:50 | பார்வைகள் : 116
WhatsApp, அதன் iOS பீட்டா பதிப்பில் புதிய பாதுகாப்பு அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
இந்த அம்சம் மூலம், பயனர் படித்தவுடன் அந்த மெசேஜ் தானாகவே அழிந்து விடும்.
இதற்கு முன் WhatsApp-ல் “Disappearing Messages” என்ற வசதி இருந்தது. அதில் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் போன்ற காலவரையறைகள் இருந்தன.
ஆனால், புதிய வசதி மூலம், “படித்தவுடன் அழியும்” (After Reading) என்ற விருப்பத்தைத் தெரிவு செய்ய முடியும். இதனால், தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை பாதுகாப்பாக பகிர முடியும்.
மேலும், WhatsApp, “Custom Timers” என்ற விருப்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இதில், பயனர் தானாகவே 1 மணி நேரம், 6 மணி நேரம், 2 நாட்கள் போன்ற தனிப்பட்ட காலவரையறைகளை அமைக்க முடியும்.
இந்த அம்சம் தற்போது iOS பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் Android மற்றும் பொதுப் பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan