சீனாவின் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பலி
21 வைகாசி 2026 வியாழன் 13:31 | பார்வைகள் : 1299
சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 20 இற்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan