எரிசக்தி விலை உயர்வு - புதிய உதவிகள் இன்று அறிவிப்பு!
21 வைகாசி 2026 வியாழன் 10:35 | பார்வைகள் : 144
பிரான்ஸ் பிரதமர் செபஸ்தியோன் லூ-கோர்னு (Sébastien Lecornu),எரிபொருள் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுக்காக, ஜூன் மாதத்திற்கான புதிய உதவித் திட்டங்களை , இன்று ஊடகச் சந்திப்பில் அறிவிக்க உள்ளார்.
இந்த உதவிகள் :
வேலை செய்பவர்களை பாதுகாக்க
எரிபொருள் மற்றும் பெட்ரோல் சார்ந்த பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு வழங்க
என்பதை பிரதமர் இல்லம் (Matignon) முன்பே விளக்கியுள்ளது.
ஹொண்டா வைரஸ் காரணமாக அறிவிப்பு தாமதம்
பிரான்சில் ஒரு பெண் ஹொண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால், இந்த உதவிகளின் அறிவிப்பு சில நாட்கள் தாமதமானது.
ஈரான் போரின் தாக்கம் : அரசு பொதுவான உதவிகளைத் தவிர்க்கிறது
பிப்ரவரி இறுதியில் ஈரான் போரின் தொடக்கம் முதல், அரசு பொதுவான உதவிகளை அல்ல,
இலக்கு வைக்கப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்க விரும்புகிறது.
வரி குறைப்புகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன
பொருளாதார மந்தநிலை அபாயம் காரணமாக, அரசின் வரவு செலவுத் திட்டம்கட்டுப்பாட்டில் உள்ளது
மே மாதத்தின் முதல் 10 நாட்களில் எரிபொருள் நுகர்வு 30% குறைந்ததால், அரசு கூடுதல் வருவாய் பெறவில்லை
என லூ-கோர்னு தெரிவித்துள்ளார்.
பொருளாதார அமைச்சர் லோரோன் லெஸ்கியூர் (Roland Lescure),
«அரசு இனி பொதுவான உதவிகளை வழங்காது»
«உதவி மிகவும் தேவைப்படுவோருக்கு மட்டுமே வழங்கப்படும்»
எனக் காரணத்தை அடுக்கியுள்ளார்.
SP95‑E10 மற்றும் SP98 விலைகள், மத்திய கிழக்கு போரின் தொடக்கம் முதல் மிக உயர்ந்த நிலை அடைந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan