காதார துறையில் பாலியல் வன்முறைகள் - அரசு நடவடிக்கை- பாதிக்கப்பட்டவர்கள்!
20 வைகாசி 2026 புதன் 18:17 | பார்வைகள் : 123
"Santexpo" சுகாதார மாநாட்டில், chirurgien de Jonzac வழக்கின் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் பேச்சாளர் மனொன் லூமுவான் (Manon Lemoine), மருத்துவ துறையில் நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக தண்டனையில்லா நிலையை நிறுத்த அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"ஜோன்சாக் அறுவை சிகிச்சை நிபுணர் வழக்கு (chirurgien de Jonzac) என்றும் அழைக்கப்படும் ஜோயல் லெ ஸ்கோவர்னெக் (Joël Le Scouarnec) வழக்கு, 1950-ல் பாரிஸில் பிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜோயல் லெ ஸ்கோவர்னெக் என்பவரைப் பற்றியது. அவர் மீது பல நூறு பேர் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கூறப்படும் இந்தக் குற்றங்கள் பல ஆண்டுகளாகவும், பல நகரங்களிலும் நடந்துள்ளன. நான்கு சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, 2020-ல் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்து, பின்னர் அந்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்"
298 பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜோயல் லெ ஸ்கோவர்னெக், "விதிவிலக்கு அல்ல," "இது தினமும் நடக்கிறது". பல சுகாதார பணியாளர்கள் பயம் காரணமாக சாட்சியமளிக்க முடியவில்லை, எனவே தகவல்களை வெளிப்படுத்துபவர்களிற்கு (lancer d'alerte)பாதுகாப்பு அவசியம் என்று மனொன் லூமுவான் கோரிக்கை விடுத்தார்.
மனநல நிபுணர்கள், மருத்துவர்களுக்கு எதிரான தண்டனைகள் நான்கு அமைப்புகளில் இருந்தாலும், ஒருங்கிணைப்பு இல்லாததால் நடவடிக்கை தாமதமாகிறது என்றும் சுட்டிக்காட்டினர்.
அரசு விரைவில் ஒரு சட்ட மசோதா கொண்டு வர உள்ளது
சுகாதார பணியாளர்களின் நற்பண்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல்
தண்டனைகள் மற்றும் கண்காணிப்பை அதிகரித்தல்
பயிற்சியில் "பாலியல்/பாலின வன்முறை" எதிர்வினை பாடங்கள் சேர்த்தல்
குற்றச்சாட்டு ஆனவுடன் பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்களைச் செய்தவர்களின் FIJAIS (Fichier des auteurs d'infractions sexuelles ou violentes) பதிவேடு மற்றும் நோயாளிகளுடன் பணியாற்ற தடை
இந்த மாற்றங்கள், மருத்துவ துறையில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan