Paristamil Navigation Paristamil advert login

நீண்டகால திருமண வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட காரணம் என்ன?

 நீண்டகால திருமண வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட  காரணம் என்ன?

20 வைகாசி 2026 புதன் 16:30 | பார்வைகள் : 155


நடிகர் ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த மனவேதனைகள் குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியது, தம்பதியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுப்பூர்வமான இடைவெளி,  தீர்க்கப்படாத மன அழுத்தம் போன்ற விஷயங்கள் சிறிது சிறிதாக உறவின் மகிழ்ச்சியை அழிக்கின்றன.

நடிகர் ரவி மோகனுக்கு 2009ல் திருமணம் நடந்த நிலையில், தனது மனைவி ஆர்த்தியை பிரியபோவதாக அறிவித்துவிட்டு விவாகரத்து கோரினார். சமீபத்திய பேட்டியில் நடிகர் ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் பல ஆண்டுகளாக மகிழ்ச்சியின்றி வாழ்ந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து சமூகத்தில் முக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளது.

உணர்வுப்பூர்வமான இடைவெளி, தீர்க்கப்படாத பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் தவறான தகவல் தொடர்பு போன்றவை காலப்போக்கில் உறவை பலவீனப்படுத்துகின்றன என குடும்பநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

திருமண உறவை மெளனமாக சிதைக்கும் 5 முக்கிய காரணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

காலப்போக்கில் குறையும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை
ரவி மோகன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை ஏற்படுவதற்கு தகவல் தொடர்பு இல்லாமை முக்கியமான காரணமாகும். தம்பதியினர் உணர்வுகள் பகிர்வதை நிறுத்திவிட்டு கடமைகளை பற்றி மட்டுமே பேசத் தொடங்கும்போது விரிசல் ஆரம்பிக்கிறது.

ரவி மோகன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை ஏற்படுவதற்கு தகவல் தொடர்பு இல்லாமை முக்கியமான காரணமாகும். தம்பதியினர் உணர்வுகள் பகிர்வதை நிறுத்திவிட்டு கடமைகளை பற்றி மட்டுமே பேசத் தொடங்கும்போது விரிசல் ஆரம்பிக்கிறது.

இதனால், சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதம் செய்வது, கோபத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பது, ஒருவரை ஒருவர் தவிர்க்க ஆரம்பிப்பது போன்ற சூழல்கள் உண்டாக செய்யலாம்.

American psychological association-ல் வெளியான ஆய்வறிக்கைபடி, எதிர்மறையான தகவல் தொடர்பு முறைகள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைத்து, தம்பதிகளுக்கு இடையே உணர்ச்சி ரீதியான பிணைப்பை உண்டாக்கும் என குறிப்பிடப்ட்டுள்ளது.

ஒன்றாக இருந்தும் தனிமை
சில தம்பதிகள் ஒரே வீட்டையும், அன்றாட வேலைகளையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், மனரீதியாக தனித்து இருப்பார்கள். இதனை emotional neglect என நிபுணர்கள் அழைக்கிறார்கள்.

இதனால் அர்த்தமுள்ள உரையாடல்கள் குறைவது, இருவருக்கும் இடையிலான பாச பிணைப்பு இல்லாமை, எப்போதும் தனிமை உணர்வு, ஒன்றாக நேரம் செலவிட விருப்பமின்மை போன்றவை முக்கிய அறிகுறிகள்
இது மிக அமைதியாக உறவுக்குள் ஊடுருவி ஒட்டுமொத்த அன்பையும் அழித்துவிடும்.

தீர்க்கப்படாத மன அழுத்தம்
வேலைப்பளு, பண பிரச்சனை, குடும்ப பொறுப்புகள், குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சிரமம் போன்ற வெளிப்புற அழுத்தங்கள் உறவின் தரத்தைப் பாதிக்கின்றன.

Clinical Psychology Review-ல் வெளியான ஆய்வின்படி, மன அழுத்தம் அதிகமாகும்போது தம்பதியினருக்குள் நேரம் செலவிடுவது குறைய ஆரம்பிக்கும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை நிறுத்திவிடுகிறார்கள், சிறிய விஷயங்களுக்குக் கூட எரிச்சலடைந்து மோதல்கள் உண்டாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரவி மோகன் இன்டர்வியூ எந்தளவிற்கு மன அழுத்ததிற்குள்ளான திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளார் என்பதை காட்டுகிறது.

உணர்வுப்பூர்வமான நெருக்கம் குறைதல்
திருமணத்தில் உணர்வுப்பூர்வமான நெருக்கம் என்பது வெறும் காதல் மட்டுமல்ல. அது ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக உணர்வது, பயங்களை பகிர்ந்துகொள்வது மற்றும் துணையை மதிப்பதாகும்.

கோபத்தில் இருக்கும்போது துணையுடன் பேசுவதை தவிர்த்து, தன்னைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிகொள்வது, உறவின் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் முற்றிலுமாக சிதைத்துவிடும் என கூறப்படுகிறது.

குடும்பம் மற்றும் சமூக காரணங்கள்
பல தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லாதபோதும் உடனடியாக விவாகரத்து செய்ய நினைப்பதில்லை. அதற்கு குழந்தைகளின் எதிர்காலம், குடும்பத்தின் கௌரவம், விவாகரத்து பற்றிய பயம், ஒருநாள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை போன்ற காரணங்களாக இருக்கலாம்.

இதனால் பல ஆண்டுகள் மனக்கவலையிலே அவர்கள் காலத்தை கழிக்க நேரிடுகிறது. திருமணமான நாள் முதல் பிரச்சனை சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையிலே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததாக ரவி மோகன் உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான திருமண உறவிற்கு என்ன தேவை?
வெளிப்படையான பேச்சுவார்த்தை, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஈகோ பார்க்காமல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, துணையின் முயற்சிகளை பாராட்டுவது ஆகிய 4 விஷயங்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

Institute for Family Studies வெளியிட்ட ஆய்வின் படி, அடிக்கடி ‘Date Night’ செல்வது உணர்ச்சி ரீதியான நெருக்கம் மற்றும் தகவல் தொடர்பை மேம்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் கொடுக்கும் உணர்வுப்பூர்வமான ஆதரவும், விட்டுக் கொடுத்தலும் மட்டுமே திருமண வாழ்க்கை பயணத்தை இனிமையாக்கும். உறவில் விரிசல் ஆரம்பிக்கும்போதே தயங்காமல் மனநல ஆலோசகரை அணுகுதல் அல்லது இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பியுங்கள்.