பாகிஸ்தானை டெஸ்டில் ஒயிட்வாஷ் செய்த வங்காளதேசம்
20 வைகாசி 2026 புதன் 11:59 | பார்வைகள் : 126
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்காளதேச அணி முழுமையாக கைப்பற்றியது.
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்தது.
வங்காளதேச அணி நிர்ணயித்த 437 ஓட்டங்களை இலக்கினை நோக்கி பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மொஹம்மது ரிஸ்வான் 75 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 20.05.2026 கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கியது.
பவுண்டரிகளை விரட்டிய சாஜித் கான் 28 (36) ஓட்டங்களில் ஷாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து சதத்தை நோக்கி பயணித்த மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) 94 ஓட்டங்களில் இருந்தபோது ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் மெஹிதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் குர்ரம் ஷாஸத் வெளியேற பாகிஸ்தான் அணி 358 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வங்காளதேச தரப்பில் குர்ரம் ஷாஸத் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அப்பாஸ் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan