தட்டுப்பாடு நிலவுவதால் டீசல், பெட்ரோல் விலை இனி தினமும் மாறும்!
20 வைகாசி 2026 புதன் 11:45 | பார்வைகள் : 121
நாடு முழுதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 82 காசும், டீசல் விலை லிட்டருக்கு, 86 காசும் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன் தான், தலா, 3 ரூபாய் விலை ஏற்றப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், முன்பு இருந்தது போல் பெட்ரோல், டீசல் விலையை, இனி தினமும் மாற்றம் செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன.
அவை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வந்தன. அடுத்த நாளுக்கான விலை, முந்தைய நாள் நள்ளிரவு 12:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, 2017 ஜூனில் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில், 2021ல் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், டீசல் விலை, 100 ரூபாயை தாண்டியது. இதற்கிடையே, அந்தாண்டு தீபாவளிக்கு பெட்ரோல், லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. பின், பெட்ரோல், டீசல் விலை பல நாட்களாக மாற்றப்படவில்லை.
அதையடுத்து, 2022 மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை, மத்திய அரசு குறைத்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு எட்டு ரூபாயும், டீசல் லிட்டருக்கு ஆறு ரூபாயும் குறைந்தது.
தொடர்ந்து, 2024 மார்ச்சில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. அதற்கு பின், பெட்ரோல், டீசல் விலை, தினசரி அடிப்படையில் மாற்றம் செய்யப் படவில்லை.
மேற்காசிய நாடுகளில், இந்தாண்டு மார்ச்சில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதுடன், பல நாடுகளில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு, 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் விலை, 103.67 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு, 95.25 ரூபாயாகவும் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் நாடு முழுதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 82 காசும், டீசல் விலை லிட்டருக்கு, 86 காசும் உயர்த்தப்பட்டு உள்ளது.
எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுபோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதுடன் தட்டுப்பாடும் நிலவுகிறது.
அந்நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில் விலை குறைவாகவே உள்ளது. இனி தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan